ஆன்லைன் ரம்மி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!

அரசியல்

ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.

தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தம் இரண்டு அமர்வுகளாக இந்த நீண்ட கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் அதானி குழும பங்குகள் சரிவு, ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டு, எல்ஐசி பங்குகள் சரிவு, மோடி பிபிசி ஆவணப் பட சர்ச்சை போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரி கோஷம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று தமிழ்நாடு எம்பிக்கள் குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை மற்றும் நீட் தேர்வு ரத்து குறித்து விவாதிப்பார்கள் என்று நம்பப்பட்டது.

இந்நிலையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆன்லைன் ரம்மி குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவிற்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது மட்டுமில்லாமல் அதனை அரசுக்கே சமீபத்தில் மீண்டும் திருப்பி அனுப்பியிருந்தார்.

இது பெரும் விவாதத்திற்குள்ளான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் திமுக எம்பி டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு நோட்டீஸை வழங்கியுள்ளார்.

மோனிஷா

கர்நாடகாவில் ஸ்டூடியோ… பங்குச் சந்தையில் நிதி திரட்டும் ஐசரி கணேஷ்

மதுபான ஊழல்: யார் இந்த கே.சி.ஆர். கவிதா? எப்படி சிக்கினார்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *