ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர்,
“மிகவும் கனத்த இதயத்தோடு இந்த சட்டமன்ற பேரவையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரமான நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாண்புமிகு உறுப்பினர்கள் பார்வைக்கு மீண்டும் வைக்கப்படுகிறது.
மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவானது இன்று மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது.
செல்வம்
பட்டாசு ஆலை வெடி விபத்து: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!