அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த வந்த ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் சந்தித்துப் பேசினர்.
இன்று (பிப்ரவரி 3) பேரறிஞர் அண்ணாவின் 55ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சியினர் அண்ணாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஸ்பெய்னிலிருந்தவாறு முதல்வர் ஸ்டாலின் அண்ணா புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட போது அண்ணா நினைவிடத்திற்கு சசிகலா வருகை தந்தார்.
அப்போது, காரில் இருந்து இறங்கி இருவரும் சந்தித்துக்கொண்டனர். ஒருசில நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஓபிஎஸை சந்தித்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
“ஒருவர் எதிரில் வரும்போது பார்த்துப் பேசுவது என்பது தமிழ்நாட்டின் பண்பு. அதன்படி பார்த்துப் பேசினேன். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்” என்றார்.
அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என நான் ஆரம்பத்திலிருந்தே நினைத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் கூறினார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 5 ஆம்தேதி ஜெயலலிதா நினைவிடத்துக்கு அடுத்தடுத்து வருகைத் தந்த போதும் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மணிகண்டன் நடிக்கும் “லவ்வர்”: ஸ்பெஷல் என்ன?
நிச்சயதார்த்த விழாவில் ஜொலித்த இந்திரஜா சங்கர்… மாப்பிள்ளை இவர்தான்!