”ஒரே நாடு, ஒரே தேர்தல்” தொடர்பான ஆய்வறிக்கையை குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்தது. one nation one election hlc report
நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2 ஆம் தேதி அமைக்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள் என பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துகள் பெறப்பட்டு,
191 நாட்கள் தொடர் ஆலோசனைக்குப் பிறகு இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்துள்ளது.
18,626 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.
எதிர்கட்சியின் சார்பில் இக்குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். one nation one election hlc report
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு முழுமையான ஒரு கண் துடைப்பு” என தெரிவித்திருந்தார்.
மேலும், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது.
இது நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு திட்டமிட்ட அவமதிப்பு” எனவும் தெரிவித்திருந்தார்.
உயர்நிலைக் குழுவின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்பட்டால், அந்தந்த மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஆயுட்காலம் முடியும் முன்னரே கலைக்கப்படுமா போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அறிக்கையை தரவிறக்கம் செய்து படிக்க.
– இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சேலம்: சிட்டிங் எம்பி பார்த்திபனுக்கு பதிலாக புதிய திமுக வேட்பாளர் யார்?
இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு!