ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்றம், சட்டமன்றம் தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் குழு அமைத்தது.
இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் சி.காஷ்யப், ஹரிஷ் சால்வ், சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குழுவிலிருந்து விலகினார். இந்த குழுவானது இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டப்பூர்வ விதிகளின் கீழ் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும்.
இந்தநிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறப்பு கூட்டத்தொடரில் அதுகுறித்த எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
IND vs AUS ODI: முதல் போட்டியில் இந்தியா அபாரம்!
மன அழுத்தம் காரணங்களும்… விடுபடும் முறையும்!