ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜேபிசி-யில் 31 எம்.பி-க்கள்… முழு விவரம்!

Published On:

| By Selvam

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று (டிசம்பர் 18) அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மக்களவையில் நேற்று (டிசம்பர் 17) அறிமுகம் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, என்சிபி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து மசோதாவை அவையில் தாக்கல் செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

முதலில் மின்னணு முறையிலும், அதனை தொடர்ந்து காகித சீட்டு முறையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை அவையில் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அமைச்சர் மேக்வால் விதி 74-ன் கீழ் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்காக ஜேபிசி அமைப்பதை முன் மொழிவதாக அறிவித்தார். அமைச்சரின் பரிந்துரையை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் பி.பி. சௌத்ரி, சி.எம். ரமேஷ், பன்சூரி ஸ்வராஜ், பர்ஷோத்தம்பாய் ரூபாலா, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், விஷ்ணு தயாள் ராம்,  பர்த்ருஹரி மஹ்தாப்,  சம்பித் பத்ரா, அனில் பலுனி, விஷ்ணு தத் சர்மா, பிரியங்கா காந்தி வத்ரா,

மணீஷ் திவாரி, சுக்தேயோ பகத், தர்மேந்திர யாதவ், கல்யாண் பானர்ஜி, டி.எம். செல்வகணபதி, ஜி.எம். ஹரிஷ் பாலயோகி, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சந்தன் சவுகான், பாலசௌரி வல்லபனேனி  ஆகியோர் மக்களவையில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர். 10 எம்.பி-க்கள் மாநிலங்களவையில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவானது 90 நாட்களில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் ஹேமா: வறட்சியைத் தடுக்கும் பானங்கள்!

அரசியல் பயணம் எப்போது?: சசிகலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share