ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Published On:

| By Kavi

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றம் நகராட்சிகள், பஞ்சாயத்து என அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்காக கடந்த ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை கேட்டது.

191 ஆய்வு பணிகளை நடத்தி 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.

2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம். அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை உள்ளிட்ட பரிந்துரைகள் அந்த அறிக்கையில் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரையை ஏற்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று (செப்டம்பர் 18) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3வது ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைந்திருப்பதை கொண்டாடும் விதமாக இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

‘சந்திரயான்-4’, ஆர்பிட்டர் மிஷன், சர்வதேச விண்வெளி மையம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஜம்மு காஷ்மீர் வாக்குப்பதிவு: மதியம் 1 மணி நிலவரம் என்ன?

என்னா வெயில்… சூரியன் ஓய்வெடுக்குமா?: வானிலை அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel