தமிழகத்தில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினம் இன்று. 251 வது நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்! 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி! ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்” என்று நினைவு கூர்ந்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் ஒண்டி வீரன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாஜக தலைவர் கே.அண்ணாமலை, “பூலித்தேவனின் போர்த் தளபதி, நெல்கட்டும் செவல் பகுதியில் மல்லுக்கட்டிய மாவீரன். ஒற்றையாய் ஆங்கிலேயரை சிதற அடித்த காரணத்தால் ஒண்டிவீரன் என்று புகழ் பெற்றவர்.
அவரது நினைவைப் போற்றுவதில் தமிழக பாஜக பெருமை கொள்கிறது” என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “போராட்ட மாவீரர்!ஒண்டிவீரன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருச்சி சிறைச்சாலையில் சோதனை – கைதிகள் போராட்டம் – 150 செல்போன்கள் பறிமுதல்!