ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

On what basis does the Governor decide

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதா மீது முடிவெடுப்பதில்லை… குடியரசு தலைவருக்கு ஏன் பரிந்துரைக்கிறார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்தது. On what basis does the Governor decide

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இரண்டாவதாக தாக்கல் செய்த ரிட் மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யூஜிசி தலைவரையும் சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த 27ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இன்று விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. 

இந்நிலையில் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு  சார்பில் முறையிடப்பட்டது. 

அதன்படி இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 4) பிற்பகல் 3 மணிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிதிபாலா மற்றும் மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் , மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். 

முதலமைச்சரிடம் ஆலோசிக்காமலேயே On what basis does the Governor decide

On what basis does the Governor decide

முகுல் ரோத்தகி வாதிடுகையில், “சட்டத்தின்படி சட்டப்பேரவையில் இருந்து ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இல்லையென்றால் திருப்பி அனுப்பி வைக்கலாம். ஒருவேளை திருப்பி அனுப்பும் மசோதா மீண்டும் ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு அவர் ஒப்புதல்தான் அளிக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்பு சொல்கிறது. இதை ஆளுநர் செய்யாத போது ஒட்டுமொத்த ஜனநாயகமும் தோற்றுவிடுகிறது.

அரசியல் சாசனத்திற்கு அடிபணிவதை தவிர வேறு வழி இல்லை. சட்டப்பிரிவு 200 இன் படி ஆளுநர் செயல்படவில்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்” என வாதிட்டார்.

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு கணக்கில் ஆளுநர் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் இருக்கிறார். 
முடிந்தவரை விரைவில் (as soon as possible) ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. 

அரசியல் சாசனம் கால நிர்ணயம் செய்யவில்லை என்பதற்காக ஆளுநர் முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. அரசியல் சாசன விதிகள் 200ன் கீழ் முறையான வழிமுறைகளை அவர் பின்பற்றவில்லை. அவருக்கு விருப்பமான வழியில் அரசியல் சாசன விதிகளை புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.

மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, “முதலமைச்சருடன் கலந்தாலோசிக்காமல் ஒரு அமைச்சரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்குகிறார். பின்னர் மாநில அரசுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன் ஊடகங்களுக்கு அறிவிக்கிறார். இந்த நடத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை புறக்கணிக்கும் முயற்சி.
நமது நாடு அதிபர் ஆட்சி முறையில் இயங்குவது அல்ல. மாறாக ஜனநாயக முறைபடி இயங்குவதாகும்” என்று வாதாடினார்.

அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “ ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார். குடியரசுத் தலைவருக்கு ஏன் மசோதாக்களை அனுப்புகிறார்? என நாளை மறுநாள் விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த விசாரணைக்கு 24 மணி நேரத்திற்கு மேல் இருப்பதால், அதற்கு முன் தமிழக அரசுடன் கலந்தாலோசித்து அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுமாறு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பிப்ரவரி 6ஆம் தேதி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட ரமணி மற்றும் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆகியோர் ஆஜராகி வாதாடவுள்ளனர். On what basis does the Governor decide

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share