ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது. 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. அதனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம். எங்களுடைய போராட்டம் தொடரும். பாஜக இந்த இடத்திற்கு வர பல தசாப்தங்கள் ஆனது. கடினமான நீண்ட பயணத்திற்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீருக்கு தேர்தல்: அன்வர் ராஜா வலியுறுத்தல்!
ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு!