புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்:
ஈரோடு, திருச்சி, செங்கல்பட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
கோவையில் செம்மொழி பூங்கா ரூ.172 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7,145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்குகள் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்படும்.
அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.
சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்ள பொது இடங்களில் இலவச வை-பை வசதி வழங்கப்படும்.
செல்வம்
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!