வரும் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி நேற்று (மார்ச் 16) அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல், மாநில அரசால் நிர்வாக ரீதியாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
இதனால் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே மாநில அரசு வருவாய் துறையில் தாசில்தார்கள் முதல் ஆட்சியர்கள் வரையிலான அதிகாரிகளையும், காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் முதல் ஐஜி வரையிலான அதிகாரிகளையும் தங்களுக்கு சாதகமான வகையில் பணியிட மாற்றம் செய்வது வழக்கம்தான்.
இந்த நிலையில்… ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளின் பட்டியலை அதிமுக தனது மாவட்ட செயலாளர்கள் மூலம் திரட்டி வருகிறது. இந்த தகவல் கிடைத்ததும், தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கவுள்ளனர் அதிமுகவினர். பாஜகவும் இது தொடர்பாக பட்டியலை தயாரித்து வருகிறது.
குறிப்பாக கோவை, தஞ்சை, சென்னை உள்ளிட்ட மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும், கடலூர் உட்பட சில மாவட்ட ஆட்சியர்களையும் மாற்ற சொல்லி புகார் கொடுக்க அதிமுக, பாஜக தரப்பினர் தயாராகி வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திர நிதி : புதிய தரவுகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
”தேர்தல் பத்திர ஊழல் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது” : ஸ்டாலின்
தேமுதிக விருப்ப மனு விநியோகம் எப்போது? : அறிவித்த பிரேமலதா