“அமைச்சர் தான் ஆனால் வெட்கத்தை விட்டு சொல்கிறேன்” : கே.என்.நேரு

அரசியல்

“அமைச்சர் தான் ஆனாலும் வெட்கத்தை விட்டு வெளிப்படையாக சொல்கிறேன். தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் இன்று(அக்டோபர் 31) நடைபெற்றது. அதில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “ஆளுநர் எதிர்க்கட்சியைப் போல செயல்படுகிறார்.

பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதிப் பெரிதாக்குகின்றனர். நான் வெளிப்படையாக, வெட்கத்தை விட்டு சொல்கிறேன். இன்றைக்கு இருக்கும் தமிழக அரசு அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்.

அப்படிதான் நிலைமை இருக்கிறது.  கடந்த காலங்களில் அதிமுக தேர்தல் போட்டி என்பது அண்ணன் தம்பி போட்டி போன்று இருந்தது. தற்போது சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருப்பவர்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

எந்தக் கட்சியில் பதவி இல்லை என்றாலும் பாஜகவிடம் சென்றால் மாநில அளவில் பதவி கொடுக்கிறார்கள். சரியாக நடந்துகொள்ளவில்லை என்று வெளியே அனுப்பப்பட்டவர்களுக்கு எல்லாம் பதவி தந்து சேர்த்துக் கொள்கிறார்கள்.

பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிரக்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்கிறது. அதிமுக ஒன்றிணையாமல் இருந்தால்தான் பாஜகவால் சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதால் தடுக்கிறது.

தேர்தலில் தேவையான இடங்களை பெறும் வகையில் அதிமுகவை பிரித்து வைத்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பது போன்ற ஒரு மாயையை உண்டாக்குகிறார்கள். மிக மிக கவனமாக பணியாற்றக்கூடிய காலம் இது” என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

கலை.ரா

சோகத்தில் முடிந்த நாடக ஒத்திகை!

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் ஏன் தெரியுமா? – அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

1 thought on ““அமைச்சர் தான் ஆனால் வெட்கத்தை விட்டு சொல்கிறேன்” : கே.என்.நேரு

  1. உண்மையைத்தானே சொல்றாரு…

Leave a Reply

Your email address will not be published.