பிரதமர் மோடியிடம் 275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சரமாரியான கேள்விகளை கேட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று(ஜூன் 5) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் , 11 பிரிவுகளின் கீழ் பல்வேறு கேள்விகளை பிரதமர் மோடியிடம் முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே முன்வைத்த கேள்விகள் சில:
9 ஆண்டுகளாக 3 லட்சம் காலிப் பணி இடங்களை நிரப்பாதது ஏன்?
18 லட்சம் ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை 12 லட்சமாக குறைத்தது ஏன்?
3.8 லட்சம் ஊழியர்களை இன்னமும் ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்திருப்பது ஏன்?
பணிநேரத்துக்கு அதிகமாக பணிபுரியவேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்துவது ஏன்?
ரயில் ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்?
தென்மேற்கு மண்டல அதிகாரி சிக்னல் கட்டமைப்பு கோளாறு தொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் அலட்சியம் ஏன்?
ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை பலப்படுத்தாமல் இருப்பது ஏன்?
ரயில்வே பாதுகாப்பு ஆணையத்துக்கு தன்னாட்சி வழங்காமல் இருப்பது ஏன்?
ரயில்வே ஆணையத்தின் பாதுகாப்பு பரிந்துரைகளை அலட்சியப்படுத்துவது ஏன்?
இந்திய தலைமை கணக்கு அதிகாரி சுட்டிக் காட்டிய பின்னும் தண்டவாளம் சீரமைப்பு இல்லை ஏன்?
காங்கிரஸ் அரசு அறிவித்த ரயில் மோதல் தடுப்பு திட்டத்தை ஏன் மோடி அரசு செயல்படுத்தவில்லை?
கான்பூர் ரயில் விபத்து சதி என கூறப்பட்டு என்.ஐ.ஏ. விசாரித்தும் கைவிடப்பட்டது
கான்பூர் ரயில் விபத்து போல ஒடிஷா ரயில் விபத்து விசாரணையை சிபிஐ நடத்துமா?
ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணமானவர்களை தண்டிக்காமல் திசை திருப்புவது ஏன்?
ஒடிஷா ரயில் விபத்துக்கு மூல காரணம் கண்டுபிடித்துவிட்டோம் என கூறிய பின் சிபிஐ விசாரணை ஏன்?
சிபிஐயில் ரயில்வே சார்ந்த வல்லுநர்கள் இல்லாத போது எப்படி விசாரணை நடை பெறும்?
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை 79% குறைத்தது ஏன்?
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான ரூ20,000 கோடி நிதி என்னதான் ஆயிற்று?
கவாச் திட்டத்தை 4% வழித்தடங்களில் மட்டுமே அமல்படுத்தி இருப்பது ஏன்?
ஒடிஷா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை என்பது திசை திருப்புவதற்காகவா?
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்தில்தான் தனி ரயில்வே பட்ஜெட் முறையையே கைவிட்டதா மத்திய பாஜக அரசு? என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் கார்கே.
மு.வா.ஜெகதீஸ் குமார்
போராட்டத்தை கைவிட்டேனா? சாக்ஷி மாலிக் விளக்கம்!
டாஸ்மாக் கடைகள் மூடல்: அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!