பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு!

அரசியல்

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் அங்கீகரிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு அளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏப்ரல் 12-ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையின்போது கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளகூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை அங்கீகரிக்க கோரியது தொடர்பாக 10நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், “2021-ஆம் ஆண்டு பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வுசெய்யப்பட்டோம்.

இந்த நிலைதான் தற்போதும் தொடர்கிறது. கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தான் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு அதிமுக சட்டவிதிகளுக்கு எதிராக பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.

இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்ககூடாது.

2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம்தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனை கருத்தில் கொள்ளாமல் கர்நாடக தேர்தலை சுட்டிக்காட்டி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுப்பதை ஏற்க கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

தனியார் பள்ளிகளுக்கு பாய்ந்த எச்சரிக்கை!

பாரம்பரிய தினம்: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *