மருது சகோதரர்கள் குருபூஜை: மாஸ் காட்டிய ஓ.பி.எஸ்

அரசியல்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாக விளங்கிய மருது சகோதரர்களின் நினைவு தினத்தையொட்டி அவர்களது நினைவிடத்தில் இன்று (அக்டோபர் 27 ) ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 221 வது குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வில் சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து மரியாதை செய்தனர்.

இந்நிலையில், முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று (அக்டோபர் 27 ) காளையார்கோவில் சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவகங்கை, காளையார்கோவில் வழியாக மருது சகோதரர்கள் நினைவிடத்திற்கு திறந்த வேனில் வந்த அவர் அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கை அசைத்தார். அவரை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து வந்தன. கூட்ட நெரிசலால் அங்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது.

பின்னர், மருது சகோதரர்கள் நினைவிடத்திற்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், புகழேந்தி , கிருஷ்ணராவ் மற்றும் மருது அழகு ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கேசிஆர் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக குதிரை பேரம்: சிக்கிய கோடிகள்!

பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்: ஜாக்கிரதை தமிழ்நாடு!

+1
0
+1
3
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *