ஓபிஎஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் இன்று (மார்ச் 9) எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராகச் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் இருந்து ஓபிஎஸ் தரப்பு விலகி கொள்வதாக அறிவித்தது. ஆனால் செந்தில்முருகன் தேர்தல் ஆணையத்திடம் வாபஸ் மனுவை அளிக்கவில்லை. இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் முருகனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஓ. பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 9) அறிவித்துள்ளார்.
அதில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், செந்தில் முருகன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
மோனிஷா
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநருக்கு எதிர்ப்பு!
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு