o panneerselvam released new letter-pad

அதிமுக பெயர், சின்னம், பதவி எதுவுமில்ல… பன்னீர் லெட்டர் பேடில் மாற்றம்!

அரசியல்

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் என்று மட்டும் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை கவனம் பெற்றுள்ளது. o panneerselvam released new letter-pad

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் கடந்த 7ஆம் தேதி  உத்தரவிட்டார்.

தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை நீக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நவம்பர் 15ஆம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடியைச் சேர்ந்த ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்தின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக அவரது லெட்டர் பேடில், அதிமுக பெயர், சின்னம் ஆகியவற்றுடன், கட்சியில் அவர் வகித்த ’ஒருங்கிணைப்பாளர்’ மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

ஆனால் தற்போது உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை அடுத்து, நேற்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கட்சி தொடர்பான எந்தவித அடையாளமும் இல்லை.

மாறாக தமிழ்நாடு அரசின் சின்னத்துடன், ’தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்த லெட்டர்பேடில் அவர் தனது கையெழுத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு  வருகிறது. வழக்கின் முடிவில் தான் அவர் அதிமுக லெட்டர்பேடை இனி பயன்படுத்த முடியுமா? முடியாதா? என்பது தெரியவரும். o panneerselvam released new letter-pad

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா  

தளபதி 68 : நெகட்டிவ் ரோலில் விஜய்?

சென்னை: இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் இரண்டு உள்நாட்டு முனையங்கள்!

அறிமுகமானது விவோ X100, விவோ X100 Pro: விலை, சிறப்பம்சங்கள் என்ன?

சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *