வருமானவரித் துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (மார்ச் 1) வாபஸ் பெற்றுள்ளார்.
சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் நடத்திய சோதனை அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதனை ரத்து செய்யக் கோரியும், மேல் நடவடிக்கைக்கு தடை கோரியும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதை ஏற்றுக் கொண்டு, மனுவை திரும்ப பெற அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர்: தடையை நீக்க மறுத்த நீதிமன்றம்
ஸ்டாலின் போலீசா? அமித் ஷா போலீசா? ராஜினாமா மூடில் திருமாவளவன்: சிறுத்தையின் சீற்றப் பின்னணி!