அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நாளை விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தொடர்ந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு மார்ச் 28-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிபதி மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரப்பட்டது. அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவரும் தாங்கள் தொடர்ந்த வழக்குகளையும் ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்குடன் சேர்ந்த்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு மட்டும் இன்று பட்டியலிடப்பட்டிருந்தது. மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனு பட்டியலிடப்படவில்லை.
தங்களுடைய மனுக்களையும் ஓ.பி.எஸ் மனுவுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவரும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.
செல்வம்
நஷ்டத்தில் தமிழகப் போக்குவரத்து கழகங்கள்!
பல்கலைக்கழகங்களில் சாதி ஒடுக்குமுறை ஏன்? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!