தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவித்த ஓபிஎஸ்

அரசியல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 30) பசும்பொன்னில் தேவர் சிலைக்கு வெள்ளி கவசத்தை அணிவித்தார்.

இன்று காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற ஓ.பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களுடன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை தேவர் சிலைக்கு அணிவித்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செல்வம்

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம் : அதிகரிக்கும் உயிர்பலி!

விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் கார்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.