ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் இன்று (டிசம்பர் 5) அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது தொண்டர்களோடு பேரணியாக சேப்பாக்கத்தில் இருந்து மெரினா கடற்கரைக்குச் சென்றார்.
பின்னர் அங்குள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.
பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்கும்போது,
“புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா அவர்கள் இயக்கத்தின் இதயமாக கருதிய, கழகமே உலகம் எனும் வாழும் தொண்டர்களைத் தான்.
அப்படிப்பட்ட தொண்டர்களின் கருத்துக்களுக்கு மாபெரும் தலைவர்களால் தரப்பட்ட மதிப்பும், முக்கியத்துவமும் இன்று சிலரால் திட்டமிட்டு பறிக்க முயல்வதை, தொண்டர்கள் துணையோடு முறியடித்து அதிமுக என்ற அப்பழுக்கில்லா இயக்கத்தை தொடர்ந்து கொண்டு சென்றிட உளமாற உறுதியேற்போம்.” என்று தெரிவிக்கப்பட்டது.
செல்வம்
தீ தளபதி பாடல்: மோதலில் ரசிகர்கள் பதிவு!
தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!