மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை!

அரசியல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 20) மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, தேமுதிக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

கட்சியின் முன்னணி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

o panneerselvam meeting with his supporters

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார்.

பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததாலும் ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப பெற்றார்.

இந்தநிலையில், அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மகளிர் டி20: பந்துவீச்சில் இலங்கையை பந்தாடிய நியூசிலாந்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *