அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று (அக்டோபர் 10) ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றோர் அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர். அதிமுக விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலும் உள்ளது.
இந்த நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 10) இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்களைச் சிறப்பாக நடத்துவது ஆலோசிக்கப்பட்டது.
கட்சியையைப் பலப்படுத்துவது, கட்சி ரீதியாக காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமிக்குப் போட்டியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இன்று (அக்டோபர் 10) ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலிருந்து அதிகம் பேர் வந்திருந்தனர் என்பதுதான் கூடுதல் தகவல்.
“1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, எம்.ஜி.ஆரால் அதிமுக தொடங்கப்பட்டது. இந்த கழகம் இன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை, நாம் சிறப்புடன் கொண்டாட வேண்டும்.
அதுபோல், அக்டோபர் 17ம் தேதி சட்டப்பேரவை தொடங்க இருக்கிறது. அதிலும் நாம் கலந்துகொள்ள வேண்டும்” என ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கியுள்ளாராம்.
வணங்காமுடி
கூட்டணி மற்றும் பிற தலைவர்களுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி கூட்டம்: கே.பி.முனுசாமி புறக்கணிப்பு- பின்னணி!