மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று (பிப்ரவரி 24) மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, முன்னாள் முதல்வரும், எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது ’அதிமுகவின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்’ என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் அவர்களிடம் ஏதும் பேசாமல் இனிப்புகளை மட்டும் வழங்கினார்.
அதேவேளையில் இன்று 12 மணிக்கு செய்தியாளர்களை ஜெயலலிதா நினைவிடத்தில் சந்திப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
உலக வங்கி தலைவர் பதவியில் இந்திய வம்சாவளி!
மல்லுக்கட்டிய மக்னா யானை… போராடி பிடித்த வனத்துறையினருக்கு புதிய சிக்கல்!