பசும்பொன்னில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கக்கூடாது என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று (அக்டோபர் 30) முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி உள்ளே மரியாதை செலுத்தி கொண்டிருக்கும்போதே வெளியில் குவிந்திருந்த ஒரு தரப்பினர், “எடப்பாடி ஒழிக, சசிகலாவுக்கு துரோகம் செய்தவர், தேவர் நினைவிடத்தை விட்டு வெளியேறு, கடந்த ஆண்டு வராமல் இந்த ஆண்டு வருவது ஏன், எல்லாம் தேர்தலுக்காக” என்றெல்லாம் கோஷம் எழுப்பினர்.
அதுபோன்று 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகவேல் மற்றும் பொதிகுளத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் எடப்பாடி பழனிசாமி செல்லும்போது கற்கள் மற்றும் காலணி வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து இன்று (அக்டோபர் 31) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ” நேற்று முன்தினம் சமூக வலைதளம் மூலமாக புண்ணிய பூமியான பசும்பொன்னுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்த ஒரு தொந்தரவையும் துயரத்தையும் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தேன். அந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டதா?
எம்.எஸ்.சாமிநாதன் வேளாண்மைக்கு ஆற்றிய பணிகள்!