கொரோனா காலத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு உணவு வழங்கியதாக அநியாயமாக பில் கொடுத்தவர்களுக்கு பில் செட்டில் செய்யவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் கூறியபோது சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 29) உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அப்போது சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், “கடந்த கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கும், அவர்களுக்கு உணவு வழங்கிய ரெஸ்டாரண்டுகளுக்கும் இன்னும் உரிய பணம் தரவில்லை என்ற செய்தி என்னிடம் தரப்பட்டது. இதுகுறித்து அமைச்சரின் பதிலை அறிய விரும்புகிறேன்” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஏற்கனவே சட்டப்பேரவையில் இதுகுறித்து விவாதித்திருக்கிறோம். நியாயமான முறையில் உணவு வழங்கி நியாயமாக பில் கொடுத்தவர்களுக்கு அவற்றை செட்டில் செய்துவிட்டோம்.
அநியாயமாக (பேரவையில் சிரிப்பலை) ஓட்டலே இல்லாமல் வெறும் உணவு சப்ளை செய்ததாகக் கொடுக்கப்பட்ட பில்லைதான் செட்டில் செய்யாமல் வைத்திருக்கிறோம். அதையும் கூட ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
உண்மையிலேயே உணவைத் தரமாக வழங்கியிருப்பார்கள் என்றால் அதற்கான பில் செட்டில் செய்யப்படும்” என கூறினார்.
பிரியா
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாய் மே 10
பேருந்து, ரயில், மெட்ரோ : ஒரே டிக்கெட் எப்போது?