கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் குணமடைந்து இன்று (ஜூலை 24) வீடு திரும்பினார்.
அதிமுகவிற்குள் நடைபெற்று வரும் உட்கட்சி பூசலைத் தொடர்ந்து பலரையும் சந்தித்து வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஜூலை 15ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டே கட்சி சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். ஜூலை 18ஆம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்கு செலுத்தினார்.
தொடர்ந்து 8 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார். எனினும் இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரியா