கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க இன்று (மார்ச் 15) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியிடம் இருந்து சின்னம் குறித்த கோரிக்கை மனு தாமதமாக பெறப்பட்டதால், கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகத்தில் உள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
அதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடவுள்ளதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
முன்னதாக, தூத்துக்குடி வெள்ள நிவாரணப் பணிகளில் இருந்ததால் சின்னத்திற்கான கோரிக்கை மனுவை தாமதமாக அளித்ததாகவும்,
தமிழகத்தில் 7 சதவீதம் வாக்கு வைத்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் வழக்கமாக வழங்கப்படும் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை அளிக்கக்கோரி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (மார்ச் 15) நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது, நாம் தமிழர் கட்சி சார்பில் கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி கரும்பு விவசாயி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
மேலும், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவையில் பிரதமரின் `ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுப்பு : பாஜக வழக்கு!
4 புதிய மாநகராட்சிகள் : முதல்வர் அறிவிப்பு!