நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் ஐடி விங் பக்கம், இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இவர்களது ட்விட்டர் பக்கத்தில் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ட்விட்டர் கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வம்
மேகதாது அணை திட்டம்: கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு!
“தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” – அமெரிக்காவில் ராகுல்