Seeman Supports Toddy Movement Protest

‘கள்’ இறக்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு!

தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள கள் இறக்கும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்து அதற்கான காரணத்தையும் சீமான் விளக்கியுள்ளார்.

கள் ஒரு போதைப்பொருள் அல்ல. கள்ளை, மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் வரும் 2025 ஜனவரி 21-ம் தேதி பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கம் மேற்கொள்ளும் என அதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் வரும் ஜனவரி 21-ம் தேதி நடைபெறும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கிச் சந்தைப்படுத்தும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவையும் அளிக்கும். அத்துடன் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வெல்லவும் துணைநிற்கும்.

தமிழர் வாழ்வியலின் ஒரு கூறாக விளங்கிய கள்ளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து, கள் இறக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர்ச்சியாகப் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ்நாடு கள் இயக்கத்துக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: சென்னை பீச் டூ தாம்பரம் ரயில் ரத்து முதல் ‘புஷ்பா 2’ டிரெய்லர் வரை!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக் கூடாது… இதோ வழி!

மகாராஷ்டிராவிலும் பானை- விசிக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு!

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து : விக்னேஷ் மீது டாக்டர் ஜாக்குலின் மோசஸ் புகார்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts