ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (டிசம்பர் 22) தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான்” திருப்போரூர் கந்தசாமி கோவில் உண்டியலில் பக்தர் தவறுதலாக போட்ட ஐஃபோன் கோவிலிற்கே சொந்தம் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
ஒரு வேலை முருகர் வள்ளியிடம் ஐஃபோனில் பேச ஆசைப்பட்டாரோ என்னவோ? ஐஃபோனை கோவில் நிர்வாகம் அதன் உரிமையாளரிடமே கொடுத்திருக்க வேண்டும்.
அவர்கள் அதை வைத்து என்ன செய்ய போகிறார்கள்? ஃபோனை விற்று அதன் மூலம் கிடைக்கும் காசை உண்டியலில் போடுவார்களா? ஒரு வேலை ஒரு பக்தர் வெடிகுண்டை தவறுதலாக உண்டியலில் போட்டுவிட்டால், கோவில் நிர்வாகம் என்ன செய்யும்?
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் நாங்கள் போட்டியிடுவோம். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சிகள் இருக்காது. மக்களிடம் நலத் திட்டங்களை கொண்டு செல்வதற்கு வட்டாட்சியர், கிராம அதிகாரி போன்றோர் இருக்கும்போது உள்ளாட்சிகள் எதற்கு?
ஊழல், சாதி, மத மோதல் போன்றவை உள்ளாட்சியில்தான் ஆரம்பமாகிறது. உள்ளாட்சி அல்லாமல் நான் ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தி காட்டுகிறேன்” என்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற்றால் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு,”நிச்சயமாக போட்டியிடுவோம்” என்றார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”2026 தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி உறுதி” : உதயநிதி நம்பிக்கை!
முதலிடத்தில் இந்தியப்படம் : தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்ட ஒபாமா