கலைஞரே சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்! – சீமான் விளக்கம்!

Published On:

| By Selvam

முன்னாள் முதல்வர் கலைஞரே சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 13) தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இரண்டு நாட்களுக்கு முன்பாக எனது தம்பி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

மேடையில் அவர் பாடிய பாட்டு அவருக்கு உண்மையிலேயே தெரியாது. அந்த பாட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

பாட்டை இயற்றி வெளியிட்டது அதிமுக தான். ஜெயலலிதா இருக்கும் போது பல மேடைகளில் அந்த பாடல் பாடப்பட்டது. இதே கருத்து சொல்லப்பட்டது. அன்றைக்கெல்லாம் இவர்களுக்கு வருத்தமோ கோபமோ இல்லை.

அதை நாங்கள் பாடும் போது கோபப்படுகிறார்கள். அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவது இதற்கெல்லாம் ஆதித்தாய் தோற்றுவாய் திமுக தான்.

குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை அவதூறாக பேசினார்.

இப்போது திமுக கட்சியில் உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் ஆகியோர் பெண்களை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். நாகரீக அரசியலை கற்றுக்கொடுப்பதற்கு தகுதி நேர்மை இல்லாத கட்சி திமுக தான்.

சண்டாளன் என்ற சமூகம் இருந்ததே எங்களுக்கு தெரியாது. குறிப்பாக நாங்கள் பிறந்த ராமநாதபுரத்தில் அட சண்டாளப் பாவி, என்று சாதாரணமாக பேசுவோம். பருத்திவீரன் படத்தில் அடி சண்டாளி உன் பாசத்தால என்ற பாடல் இருக்கிறது. அப்போதெல்லாம் அவர்கள் பேசவில்லை.

ஆனால், பாஞ்சாலங்குறிச்சி படத்தை நான் எடுக்கும்போது வடிவேலு பேசிய ஒரு நகைச்சுவையில் அட சண்டாளா, அட சண்டாளா என ஒருவார்த்தை பேசுவார். உண்மையிலே எனக்கு அந்த வார்த்தைக்கு அப்போது அர்த்தம் தெரியாது. படம் வெளியான போது அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கக்கூடாது என்று எனக்கு கடிதம் வந்தது.

அதன்பிறகு தான் இந்த பெயரில் ஒரு சமூகம் இருக்கிறது என்று எனக்கு தெரியவந்தது. அதற்காக நான் வருத்தக் கடிதம் எழுதினேன். கலைஞர் தான் சலுக்கர்கள், சண்டாளன் என்ற பெயரை அதிகமாக பயன்படுத்தினார். சங்க இலக்கியங்கள், கந்தசஷ்டி கவசம் உள்ளிட்டவற்றிலும் சண்டாளன் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

7 மாநில சட்டமன்ற இடைத் தேர்தல்: ‘இந்தியா’ கூட்டணி முன்னிலை!

விக்கிரவாண்டி தேர்தல்: திமுக முன்னிலை… பட்டாசு வெடித்து நிர்வாகிகள் கொண்டாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share