ntk seeman birthday wishes

சீமான் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

அரசியல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ntk seeman birthday wishes

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 57-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் சீமான் பிறந்தநாளை அக்கட்சியினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சீமானை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அன்பு சகோதரர் சீமானுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீமான் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன்.

அன்புமணி ராமதாஸ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் பிறந்தநாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்.

அண்ணாமலை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணிகளை தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாளின் போது விஜய் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். ntk seeman birthday wishes

அதேபோல சீமான் பிறந்தநாளுக்கும் நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

விஜய் தீவிரமாக அரசியல் களத்திற்கு ஆயத்தமாகி வரும் வேளையில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களின் பிறந்தநாளின் போது தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை பிரபல கல்லூரியில் நடந்த கொடூர ராகிங்… 7 மாணவர்கள் கைது!

சட்டமன்றத்தில் அநாகரீக பேச்சு… மன்னிப்பு கோரினார் நிதிஷ் குமார்

’எனர்கா கேமரிமேஜ்’ விழாவில் ஜூரியாகும் முதல் இந்தியர் ரவி கே.சந்திரன்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0