நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 8) காலை முதல் நடைபெற்று வருகிறது. ntk gets accidental votes dmk attack
தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஒன்பது சுற்றுகள் முடிவில் திமுகவின் சந்திரகுமார் 61,880 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 13,456 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 48,424 வாக்குகளாக உள்ளது.
சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் சென்னை அண்ணா அறிவாலயத்திலும், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் ’பெரியார் வாழ்க’ என கோஷமிட்டு திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திமுக முதலிடத்தில் உள்ளது! ntk gets accidental votes dmk attack
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேசுகையில், “இந்த நேரத்தில் எங்கள் தலைவர் ஸ்டாலின் சொன்னதையே சொல்கிறேன். ‘உதிரிகளை களத்தில் இறக்கியிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். அதுதான் நடந்துள்ளது.
எங்களுக்கு எதிரியே இல்லை என்று நான் நினைக்கவில்லை. தேர்தலில் 46 பேர் போட்டியிட்டோம். அதில் முதல் கட்சியாக பெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுக முதலிடத்தில் உள்ளது.
பிரதான எதிர்க்கட்சி ஒன்று தங்களது கட்சியில் உள்ளவர்களுக்கு சில கட்டளைகள் விதித்ததாக கருதுகிறோம். அதேநேரத்தில் நோட்டாவுக்கு வாக்குகள் அதிகரித்ததால் தேர்தலை புறக்கணித்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது.
திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத போது, நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்; திமுக யாரைக் கண்டும் அஞ்சியதில்லை. அஞ்சப்போவதும் இல்லை” என்று சந்திரகுமார் தெரிவித்தார்.