சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
முதலில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 41ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்திருக்கின்றனர். இந்த பிரிவு தங்களுக்குப் பொருந்தாது என அமலாக்கத் துறை கூறுகிறது.
செந்தில் பாலாஜி நெஞ்சு வலி வந்ததாக நடிக்கிறார் என்றும் கூறுகிறார்கள். அப்படி நடிப்பதாக இருந்தால் நெஞ்சைக் கிழித்து ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துகொள்வாரா? ” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா, அமலாக்கத் துறைக்கு சில சிக்கல்கள் இருந்தாலும் ஒருவரது உடல்நிலையைப் பற்றிக் கொச்சைப்படுத்துவது சரியானதாக இருக்காது என்று கூற,
ஒருவரது உடல்நிலையைக் கொச்சைப்படுத்த கூடாது என்று அமலாக்கத் துறை ஒப்புக்கொண்டதற்கு நன்றி என என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
பிரியா