சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கின் தீர்ப்பு விவரங்கள் குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உச்சநீதிமன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “உச்சநீதிமன்றம் சமீபகாலமாகவே அமலாக்கத்துறை தொடர்ந்த பல வழக்குகளில் தனி மனித அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை கண்டித்திருந்தது.
அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா வழக்குகளில் ஜாமீனே கொடுக்கக்கூடாது என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை நிராகரித்து உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது. இதேபோல தான் செந்தில் பாலாஜி வழக்கிலும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட முதன்மை வழக்குகள் விசாரணை முடிவடைந்து அதற்கு பிறகு பிஎம்எல்ஏ வழக்கை எடுத்து விசாரிப்பதற்கு நீண்ட காலதாமதமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள். செந்தில் பாலாஜி இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வருவார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹிந்துக்களே கோ பேக்… கலிபோர்னியா கோவிலில் எழுதப்பட்ட வாசகம்!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?