தமிழகத்தில் நாளை (நவம்பர் 6) 44 இடங்களில் நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.பேரணி சுற்றுச்சுவர் அமைத்திருக்கும் மைதானத்தில் மட்டும் நடத்த வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், அருமனை, பல்லடம் ஆகிய 6 இடங்கள் தவிர, 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
என்னை கொல்ல திட்டமிட்டது இவர்கள்தான் : இம்ரான் கான்
தொடர்ந்து மௌனம் காக்கும் எடப்பாடி
Comments are closed.