வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் மாறிமாறி ஏவுகணை சோதனை நடத்திவருவது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
வடகொரியா அவ்வப்போது தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை தொடங்கின.
இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டன.
இதையடுத்து, தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. இன்று (நவம்பர் 2) ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது.
காலை 17 ஏவுகணைகள் மற்றும் நண்பகல் 6 ஏவுகணைகள் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணைகள் தென்கொரிய கடற்பகுதியில் விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே பகுதியில் தென்கொரியாவும் ஏவுகணை ஏவி பதிலடி கொடுத்துள்ளது. இரு நாடுகளும் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
அவதார் 2: டிரைலர் இன்று வெளியீடு
ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதுரியா யார் தெரியுமா?