புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் முதல்வருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு!

அரசியல்

பாட்னாவில் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உடன் திமுக நாடாளுமன்றகுழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (மார்ச் 7 ) சந்தித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, பிகார் அரசு தங்கள் ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, இங்குள்ள பிகார் மாநிலத்தவர்களிடம் சூழ்நிலை குறித்து ஆராய்ந்தனர். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாகவும் ஒரு குழுவினர் வந்து இங்கே முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாட்னா சென்று நிதிஷ்குமாரை சந்தித்திருக்கிறார் டி.ஆர்.பாலு.

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பான கோப்புகளையும் நிதிஷ்குமாரிடம் டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார்.

மு.வா. ஜெகதீஸ் குமார்

வதந்தி கிளப்பிய உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

“திமுக ஆட்சியை அகற்ற சதி”: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.