தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதனிடையே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என உறுதியளித்தார்.
மேலும், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போல பரப்பியதாக குறிப்பிட்ட முதலமைச்சர், வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு அரணாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று (மார்ச் 5 ) வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.
மு.வ.ஜெகதீஸ் குமார்
ரூ.100 கோடி வசூல் செய்த ‘வாத்தி’: நன்றி சொன்ன தனுஷ்
ரஷ்யாவின் தற்கொலைப்படை தாக்குதல்… உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா: முடிவு என்ன?