மழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறது, எனவே பொதுமக்கள் எள் முனையளவு கூட பயப்படவேண்டாம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மற்றும் குடிநீர் வாரியம், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, 450 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. 156 இடங்களில் மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 19 முறிந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மழை நீர் அதிகம் தேங்கியுள்ள வட சென்னை பகுதிகளில் துரிதப்படுத்த வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் பயப்படத் தேவையில்லை.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மரம் சாய்ந்தால் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்துகிறோம். மின்சாரம் தடைப்பட்டால் உடனடியாக சரி செய்கிறோம்.
நீர் தேங்கிய இடங்களில் இருப்பவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் எள் முனையளவு கூட பயப்படத்தேவையில்லை. மழையை எதிர்கொள்ள அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்றார்.
கலை.ரா
பொன்னியின் செல்வன் வெற்றி : மணிரத்னம் செய்த ஏற்பாடு!
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் திறப்பு!