கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தைச் சுற்றி பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், நீர்வளத்துறையின் சார்பில் ரூ.91.36 கோடி மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர் வழித்தடம் அமைக்கும் பணி மற்றும் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களது கேள்விக்கு பதிலளித்தார்.
இந்தியா கூட்டணி 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கேஸ் விலை குறைப்பு. இந்தியா கூட்டணிக்கான நெருக்கடியா?
இல்லை, இல்லை, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி.
பெட்ரோல், டீசல் விலை கூட குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
ஆச்சரியமில்லை!
பிரியா
சொத்துக் குவிப்பு வழக்கு : ஓபிஎஸுக்கு எதிராக சூமோட்டோ பதிவு!
லவ்குருவுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு