நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் உதயநிதி கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாநாட்டில் போலீஸ் பாதுகாப்பு சரியாக வழங்கவில்லை, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட் 22) புகார் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு 15 லட்சத்தில் இருந்து 20 லட்சம் பேர் குடும்பத்தோடு வருகை தந்திருக்கின்ற நிலையில், சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய ஒரு மாநாடாக இருந்துள்ள நிலையில், இந்த மாநாட்டை விட ஒரு சிறப்பான மாநாட்டை நடத்த முடியும் என்றால் அது அதிமுகவால் தான் முடியும்.
பொதுவாக ஆளும் திமுக, இப்போது மட்டுமல்ல கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுகவின் வளர்ச்சியை, மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள். அவருடைய வழியிலேயே இன்றைக்கு ஸ்டாலின் இருக்கிறார்.
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. இந்த மாநாட்டிற்கு 15 லட்சத்தில் இருந்து 20 லட்சம் பேர் வருவார்கள், சரித்திரத்தில் முத்திரை பதிக்கும் என்று சொன்னவுடன் ஸ்டாலினுக்கு தூக்கமே போச்சு. அதனால் ஆளும் வர்க்கத்தில் இருந்து, ஆர்டிஓ மூலமாக வண்டிகளை எல்லாம் எடுக்க கூடாது போன்ற எல்லா நிர்ப்பந்தங்களையும் கொடுத்துள்ளார். அதையெல்லாம் மீறி 40 ஆயிரம் வாகனம் மதுரையை நோக்கிப் படையெடுத்தன. மாநாடும் சிறப்பாக நடந்து முடிந்தது.
மாநாட்டிற்கு 15 முதல் 20 லட்சம் பேர் வருவார்கள், 40 ஆயிரம் வாகனங்கள் வரும் என்று முன்னதாகவே போலீஸுக்கு அலர்ட் செய்தோம்” என்று டிஜிபியிடம் கொடுத்த மனுவை படித்துக் காண்பித்தார். அதில் மாநாடு நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அனுமதி கேட்டிருந்ததைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமும் அனுமதி கொடுத்துவிட்டது என்று நிம்மதியாக இருந்தோம். உயர்நீதிமன்றம் சொல்லியும் அதனை பின்பற்றாமல், போலீஸ் எந்த பாதுகாப்பும் கொடுக்காமல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் இருந்த போதும் இரு தலைவர்களின் நல்லாசியும், தொண்டர்களின் ஒத்துழைப்போடும் மாநாடு நல்ல முறையில் நடைபெற்றது.
கோர்ட் ஆர்டரை எப்படி இந்த அரசு உதாசீனப்படுத்த முடியும் என்பது தான் என்னுடைய கேள்வி. எப்படி காவல்துறை உதாசீனப்படுத்த முடியும். காவல்துறை முதலாளி யார்?. காவல்துறை அவருடைய சொற்படி தான் கேட்கணுமா?
மக்களுக்கு அமைதி, மாநாட்டில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, போக்குவரத்து சுதந்திரமாக செல்ல வேண்டியதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டியது யாருடைய பொறுப்பு. காவல்துறைக்கு ஸ்டாலினா சம்பளம் கொடுக்கிறார். நாம் காட்டும் வரிப்பணத்தில் இருந்து தான் காவல்துறைக்கு சம்பளமே கொடுக்கிறார்கள். ஆனால் காவல்துறை முதலாளி ஸ்டாலின் பேச்சை கேட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்றால் இது நீதிமன்றத்தை அவமதிக்கின்ற செயல்.
அரசியல் அறிவுறுத்தலால் தான் இன்றைக்கு காவல்துறை ஸ்டாலின் பேச்சை கேட்டு ஏவல்துறையாக செயல்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் காவல்துறை செயல்படாதாதது ஏன்?. காவல்துறையை செயல்பட விடாமல் தடுத்தது யார் என்று தீவிர விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுக மாநாட்டில் சாப்பாடு வீணாக்கப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “மாநாட்டிற்கு வரும் யாருக்கும் சாப்பாடு இல்லை என்று சொல்லக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே நிறைய சமைத்துள்ளார்கள். அதனால் தான் இந்த குறை ஏற்பட்டது. இதை அனுபவமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம்” என்றார்.
நீட் தேர்விற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு, “உதயநிதி போகும் போது கிளிசரின் போட்டுக் கொண்டு போகவில்லை போல. கண்ணில் தண்ணீர் வந்தது போல் தெரியவில்லை. என்ன ஆக்டிங். ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர், கிளிசரின் கண்ணீர் வடிப்பதையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். எள்ளி நகையாடுவார்கள். நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவுடன் அதிமுக இணையாது” என்று தெரிவித்தார்.
மோனிஷா
அதிமுக பொதுச்செயலாளர் பதவி : சசிகலா மேல்முறையீட்டு மனு விசாரணை!
யுபிஎஸ்சி ப்ரிலிம்ஸ் பாஸ் பண்ண முடியுமா?: உதயநிதிக்கு அண்ணாமலை சவால்!
மதுரைக்காரைங்களெ கூட ஒண்ணும் ஆச்சரியப்படும்படி சொல்லலியேண்ணா. நீங்க 10, 15 லச்சம்னு அடிச்சு விட்றீங்க. உங்க முதலாளி போல, அதான் மோடிஜி போல, யாராலும் சட்டுனு கண்ணீர் விட முடியாதுண்ணா. அவர வெல்ல அந்த நடிகர் திலகமே வந்தாலும் கூட முடியாதுனா பாத்துக்கோங்களென். அப்பறம் இந்த ஐடி, ஈடி, சிபிஐ மாதிரி இல்லீங்கண்ணா தமிழ்நாட்ல.
சொட்ட உளறாத