விரைவில் மதுரை வருகிறார் மோடி: நட்டா தகவல்!

அரசியல்

பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (செப்டம்பர் 22) மதுரை வந்துள்ளார்.

மதுரை வந்த நட்டாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றனர். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நட்டா தலைமையில் மதுரை சுற்று சாலையில் உள்ள தனியார் விடுதியில் பல்துறை வல்லுனர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர்,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் 1264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக 134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் நடைபெற்று அதை மோடி திறந்து வைப்பார்” என்று கூறினார்.

மேலும் அவர், “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” என்றார்.

கலை.ரா

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்திய வீரர்களின் ’வெயிட்’! சல்மான் பட் பளிச்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *