தேவர் குருபூஜைக்கு மோடி வரும் திட்டம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (அக்டோபர் 13) சென்னை திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தேவர் குருபூஜைக்கு மோடி வருகிறாரா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அனைத்து தலைவர்களின் குருபூஜைக்கும் வரவேண்டும் என்பது மோடியின் ஆசை. அனைத்து தலைவர்களையும் கொண்டாடுகிறோம்.
விரதம் இருக்கிறார்கள், காவடி எடுக்கிறார்கள். வரும் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் வழக்கம்போல பாஜக பங்கேற்கிறது.
இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. பொதுவாகவே பிரதமர் வரப் போவது இரு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருக்கும். பிரதமர் தமிழகம் வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
எல்லா தலைவர்களின் குருபூஜைக்கும் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்பது எங்களது ஆசை. அடுத்த வருடம் வர நாங்கள் கோரிக்கை வைப்போம்” என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.
-வேந்தன்
உதயநிதி போராட்டம் : அண்ணாமலை பதில்!
ஹிஜாப் வழக்கு – 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!