கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தற்போது வரை எந்த கட்சியில் இருந்தும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவின் அடிப்படையில் 9 மணி அளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் 99, பாஜக 83, மதச்சார்பற்ற ஜனதா தளம் 23, மற்றவை 2 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எக்ஸிட் போல் முடிவு படி , கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்று கூறப்படுவதால் குமாரசாமியின் கை ஓங்கியுள்ளது.
இதனால் மற்ற கட்சிகளில் இருந்து அவருடன் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசியவர், “இன்னும் 2,3 மணி நேரங்களில் எல்லாம் தெளிவாக தெரிந்து விடும். இரு தேசியக் கட்சிகளும் அமோக வெற்றி பெறும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜேடிஎஸ் கட்சிக்கு 30 முதல் 32 இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவித்தன. எங்கள் கட்சி ஒரு சிறிய கட்சி. எனக்கு எந்த தேவையும் இல்லை.
கர்நாடக மக்களின் வளர்ச்சியை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ள வில்லை. முதலில் இறுதி முடிவுகள் என்னவென்று பார்ப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
வாக்கு எண்ணிக்கை: ஹனுமன் கோயிலில் பசவராஜ் பொம்மை தரிசனம்!
கர்நாடக வாக்கு எண்ணிக்கை: யார் முன்னிலை?