அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லை என்ற நிலை வரும்! – பன்னீர் சூளுரை!

Published On:

| By christopher

no general sect. post in admk : ops

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விரைவில் ஒரு தொண்டர் வருவார். அப்போது பொதுச்செயலாளர் பதவியே இருக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது. no general sect. post in admk : ops

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் மாநில தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று (பிப்ரவரி 18) நடைபெற்றது.

இதில், ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர்! no general sect. post in admk : ops

அப்போது பேசிய பன்னீர்செல்வம், ”அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக தான் எம்.ஜி.ஆர் உருவாக்கினார். கீழே இருக்கிற தொண்டர்கள் மேடையில் வந்து உட்கார வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, ’அதிமுக ஆட்சியின் கடைசி நேரத்தில் ஒற்றை தலைமை வேண்டும். எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் 234க்கு 234 தொகுதிகளிலும் நாம் வெற்றிப்பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் பலவேறு கருத்துகளுக்கு மத்தியில் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாம் தோல்வியை தழுவினோம்.

கடந்த 3 ஆண்டுகளாக கட்சியை ஒன்றிணைக்க தர்மயுத்தம் நடத்தி வருகிறேன். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விரைவில் ஒரு தொண்டர் வருவார். அப்போது பொதுச்செயலாளர் பதவியே இருக்காது. நமக்கு நல்ல காலம் வருகிறது.

ஜெயலலிதாவின் ஒரே கனவாக, “எனக்கு பின்னாலும் பல நூற்றாண்டுகள் அதிமுக தான் ஆட்சி செய்ய வேண்டும்” என சட்டமன்றத்தில் கூறினார். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. எனினும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற தான் நாம் போராடி வருகிறோம். அதிமுகவை வெற்றிபெற வைப்பதற்கான ரகசியம் தன்னிடம் உள்ளது. ஆனால் அதை இப்போது பகிங்கரமாக சொல்லக்கூடிய நிலைமை தற்போது இல்லை” என்று பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share