லண்டனில் இருந்து சென்னைக்கு திரும்பிய அண்ணாமலை, தனது முதல் பேட்டியில் விஜய் மற்றும் உதயநிதியை விமர்சித்துள்ளார்.
அரசியல் மேற்படிப்பிற்காக லண்டனுக்கு சென்றிருந்த தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 3 மாதத்திற்கு பிறகு இன்று (டிசம்பர் 1) சென்னை திரும்பினார். நேற்று வரவேண்டிய அவரது விமானம், புயல் காரணமாக தாமதமாகி இன்று சென்னை வந்தது. அவருக்கு தமிழக பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனையடுத்து சென்னையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஹெச்.ராஜாவுக்கு நன்றி!
அப்போது அவர், “மூன்று மாதம் காலம் வெளியே சென்று படிப்பதற்காக எனக்கு கட்சி அனுமதி அளித்தது அரிய வாய்ப்பு. இந்த காலத்தில் தமிழக பாஜகவை ஹெச். ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு மிக சிறப்பாக வழிநடத்தியது. கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் முடிந்துள்ளது. தற்போது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படக்கூடிய கிளைத் தலைவர் முதல் மாநில தலைவர் வரையிலான தேர்தலுக்கு கட்சி தயாராகி வருகிறது. கடுமையாக பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கும், ஹெச்.ராஜாவுக்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உலகின் பழமையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாலிடிக்ஸ் & இண்டர்நேஷனல் ரிலேஷன் துறை சார்பாக ’ஷிப்னிக் குருக்கள் பெல்லொஷிப்’ நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் உலக அரசியல் மாற்றம், அதில் இந்தியாவின் தாக்கம் உள்ளிட்டவற்றை நோபல் பரிசு பெற்றவர்கள், முன்னாள் பிரதமர்கள் ஆகியோர் பாடம் நடத்தினர். என்னுடைய அரசியல் பயணத்தில் இந்த மூன்று மாத காலம் என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்கு பயன்பட்டுள்ளது.” என்றார்.
விஜய் வருகையால் மக்களுக்கு வாய்ப்பு!
தொடர்ந்து அவர், “கடந்த மூன்று மாத காலத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது.
குறிப்பாக திரையுலகில் உச்சத்தில் இருக்கும் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கின்றேன். அவர் மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும் என்று வந்துள்ளார். மக்களுக்கும் தேர்தல் களத்தில் மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய் திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே பேசுகிறார். புதிதாக அதில் எதுவுமில்லை. விஜய்க்கு பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பிலும் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. அவர் இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஆனால் அரசியல் களம் என்பது வேறு.
அவர் மாநாட்டில் பேசியதற்கு எதற்கெல்லாம் பதில் அளிக்க முடியுமோ, அதற்கு பாஜக தலைவர்கள் அளித்துள்ளனர். அக்டோபர் 27ஆம் தேதிக்கு பிறகு மூன்று முறை அரசியல் நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். அரசியல் களத்தில் 365 நாட்களும் உழைக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு விஜய் தன்னை எப்படி தயார்ப்படுத்தி கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர் எப்போது தீவிர அரசியலுக்குள் வருகிறாரோ அப்போது அவருக்கு பதிலளிப்போம்.
விஜய் வருகைக்கு பின்பு, திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்து இருப்பதாக நான் பார்க்கிறேன். நாங்கள் (பாஜக) எங்களுடைய கொள்கைகளில் தனித்து தெளிவாக நிற்கிறோம். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
உதயநிதிக்கு வேகமான வளர்ச்சி!
அதே நேரத்தில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கட்சிக்குள் வேகமான வளர்ச்சி. திமுக எப்போதும் ஒரு குடும்பத்தை சார்ந்திருக்கிறது என பாஜக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மற்றவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது. அவரை எங்கே விமர்சிக்க வேண்டுமோ அங்கே விமர்சிப்போம்.
இந்திய அரசியலில் திமுக, ஆம் ஆத்மி என இருகட்சிகள் தான் குற்றச்சாட்டுகள் உள்ளவரை கொண்டாடுகின்றன. திமுக செந்தில்பாலாஜி இன்னும் விடுதலையாகவில்லை. அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் கவனித்துகொண்டிருக்கும் மக்கள் தக்க பதிலளிப்பார்கள்.
2026 முக்கியமான தேர்தல்!
அரசியலில் சீமானின் பாதை வேறு, பாஜக பாதை வேறு. எங்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருக்கிறார். அதேநேரத்தில் பாஜகவை தீவிரமாக விமர்சித்து வருகிறார்.
விஜய், சீமான், அதிமுக, திமுக, பாஜக என தமிழக மக்களுக்கு தேர்தலில் நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாக இடம்பெற உள்ளது.” என்று தெரி
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புயலுக்கு முன்பே இப்படியா? சென்னை என்னவாகும்?
புயலா… புஷ்பமா? : அப்டேட் குமாரு
Chennai Airport : அதிகாலை வரை விமானங்கள் ரத்து!
IND vs AUS 2nd Test : ஆஸி. முக்கிய வீரர் விலகல்… இந்தியா வெல்ல வாய்ப்பு!