ஆர்ப்பாட்டம் போராட்டங்களுக்கு அனுமதி கோரினால், பாரபட்சமின்றி முடிவெடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. court order to chennai police
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போராட்டங்கள் நடத்தின. அனுமதியின்றி போராடியதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் ஆளுரை எதிர்த்து திமுக போராடியதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுதொடர்பாக பாமக வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஒரே நாளில் அனுமதி court order to chennai police
அதில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன் ஏன் விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று எங்களுக்கு அனுமதி மறுத்த காவல் துறை, திமுகவினர் போராட்டத்துக்கு மட்டும் ஒரே நாளில் அனுமதி வங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

அனுமதி கொடுக்கவில்லை court order to chennai police
இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்த நிலையில், இந்த மனுவுக்கு பதில் அளித்த காவல்துறை, “திமுகவினர் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்றும் அனுமதியின்றி போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஜனவரி 31) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “காவல்துறை எந்த பாரபட்சமும் இன்றி தங்கள் கடமையை செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டம் ,போராட்டங்களுக்கு அனுமதி கேட்கும் விண்ணப்பங்களின் மீது முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கம் அளிக்க அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
பாமக மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். court order to chennai police